» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் வாலிபர் மீது ஆசிட் வீசிய கள்ளக்காதலி கைது

செவ்வாய் 29, டிசம்பர் 2020 8:59:32 AM (IST)

களியக்காவிளை அருகே வேறு பெண்ணை திருமணம் செய்ய முயன்றதால் வாலிபர் மீது திராவகம் வீசிய கள்ளக்காதலியை போலீசார் கைது செய்து விசராணை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: குமரி மாவட்டம், களியக்காவிளை அருகே பளுகல் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மேல்பாலை, நிலவானிவிளையை சேர்ந்தவர் ஷிபு (39), தொழிலாளி. இவருக்கும் அதே பகுதியை ேசர்ந்த சுந்தர பாய் (40) என்ற பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்ததாக தெரிகிறது. சுந்தரபாய்க்கு திருமணமாகி கணவர் மற்றும் குழந்தைகள் உள்ளனர். எனவே ஷிபுவை அவரது பெற்றோர் கண்டித்து வந்தனர்.

மேலும், அவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க முடிவு செய்து திருமண நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சுந்தர பாய் தகராறில் ஈடுபட்டார். எனவே அவரை சமாதானப்படுத்த ஷிபுவும் அவரது தாயாரும் சுந்தரபாயின் வீட்டிற்கு சென்றனர். அப்போது ‘திருமணம் ஆகிவிட்டால் நீ என்னை மறந்து விடுவாய்’ என சுந்தரபாய் தகராறில் ஈடுபட்டுள்ளார். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த சுந்தரபாய் ரப்பர் சீட்டுக்கு உறைய வைக்கும் திராவகத்தை ஷிபுவின் முகத்தில் வீசினார்.

இதில் அவரது கண் மற்றும் முக பகுதிகள் வெந்தது. இதனால் ஷிபு வலியால் துடித்தார். ஆனால், ஆத்திரம் தீராத சுந்தரபாய் தனது மகன் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து உருட்டுக்கட்டையால் தாக்கினார். இதை தடுக்க முயன்ற தாயாருக்கும் சரமாரியாக அடி விழுந்தது. தொடர்ந்து ஷிபுவும் தாயாரும் அங்கிருந்து தப்பி ஓடினர். படுகாயமடைந்த இருவரும் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

மேலும் ஷிபுவின் கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளதால் மேல் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் சுந்தரபாய் மற்றும் அவரது 19 வயது மகன் உள்பட 4 பேர் மீது பளுகல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும், சுந்தர பாயை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்தபகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes

Thalir Products
Nalam PasumaiyagamThoothukudi Business Directory