» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்களுக்கு சுயமாக தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்: ஆட்சியர்

திங்கள் 28, டிசம்பர் 2020 8:46:32 PM (IST)

வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்களுக்கு சுயமாக தனிமை படுத்திக்கொள்ள வேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு. சமீரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்காசி மாவட்டம் கொரோனா நோய் தடுப்புநடவடிக்கைகள் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கான அறிவிப்பு தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக தென்காசி மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவல் வெகுவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

அண்டை மாநில விமான நிலையங்களின் வழியாக வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகள் அனைவரும் புளியரை சோதனைச்சாவடியில் அமைக்கப்பட்டுள்ள பரிசோதனை நிலையத்தில் தொண்டைதடவல் பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். நாட்டின் பல்வேறு விமான நிலையங்களின் மூலமாக வந்திறங்கும் வெளிநாட்டு பயணிகளின் பட்டியல் பெறப்பட்டு அவர்களும் தொடர் கண்காணிப்பில் உள்ளார்கள்.

மேலும், தென்காசி மாவட்டத்திற்கு வெளிநாடுகளிலிருந்து குறிப்பாக ஜரோப்பிய நாடுகளில் இருந்த வரும் பயணிகள் அனைவரும் தாங்களாகவே முன்வந்து அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் அல்லது அரசு மருத்துவமனைகளுக்கோ சென்று மருத்துவ ஆலோசனை மற்றும் தொண்டை தடவல் பரிசோதனை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த நாள் முதல் 14 நாட்களுக்கு சுயமாக தனிமை படுத்திக்கொள்ள வேண்டும்.

தனிமைக்காலத்தில் காய்ச்சல், சளி, தொடர் இருமல், தொண்டை வலி போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளை அணுக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும், கொதிக்க வைத்த குடிநீரை பருகுதல், முகக்கவசம் அணிதல், அடிக்கடி கை கழுவுதல், அனைத்து இடங்களிலும் சமூக இடைவெளி கடைபிடித்தல், நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் சத்தான உணவுகளை உட்கொள்ளுதல், அவசியமின்றி வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்தல் போன்ற எளிய நடைமுறைகளை தவறாது பின்பற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கீ.சு.சமீரன் கேட்டுக்கொண்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Thalir Products

Nalam Pasumaiyagam
Thoothukudi Business Directory