» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அதிமுக முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி: அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டம்

திங்கள் 28, டிசம்பர் 2020 4:39:14 PM (IST)

அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி என அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக கூறியுள்ளார். 

அதிமுக கூட்டணியில் முதல்வர் வேட்பாளர் குறித்த விவாதம் கடந்த சில தினங்களாக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கூட்டணி கட்சியான பாஜக வெளிப்படையாக ஏற்றுக்கொள்ளவில்லை. கூட்டணியின் முதல்வர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என்று கூறுவது அதிமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. 

இந்த சர்ச்சைகளுக்கு அமைச்சர்கள் அவ்வப்போது பதில் அளித்து வருகின்றனர்.  இந்நிலையில், முதல்வர் வேட்பாளர் சர்ச்சை குறித்து அமைச்சர் ஜெயக்குமார்  மீண்டும் விளக்கம் அளித்துள்ளார். அதிமுகவின் முதல்வர் வேட்பாளரை ஏற்கும் கட்சிகளுடன் மட்டுமே கூட்டணி தொடரும் என்றும், வரும் சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக  தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாக தெரிவித்தார்.
 
‘மக்களவைத் தேர்தலுக்காக அமைக்கப்பட்ட கூட்டணியில் தற்போதைக்கு எந்த பிரச்சனையும் இல்லை. முதல்வர் வேட்பாளர் குறித்து தமிழக பாஜக  தலைவர்களின் கருத்து ஏற்புடையதாக இருக்காது. டெல்லி (பாஜக தலைமை) அறிவிப்பே இறுதியானது’ என்றும் அமைச்சர் கூறினார். இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Nalam Pasumaiyagam

Thalir ProductsBlack Forest Cakes

Thoothukudi Business Directory