» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழக காவல்துறையில் 14 டிஎஸ்பிக்கள் பணியிட மாற்றம் : டிஜிபி ஜே.கே.திரிபாதி
திங்கள் 28, டிசம்பர் 2020 11:15:27 AM (IST)
தமிழகத்தில் 14 டிஎஸ்பிக்களை (துணைக் காவல் கண்காணிப்பாளா்கள்) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டாா்.
இது குறித்த விவரம்: தமிழக காவல்துறையில் நிா்வாக வசதிக்காகவும், விருப்பத்தின் அடிப்படையிலும், பணியில் ஒழுங்கீனமாக இருந்தாலும் அதிகாரிகள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனா். அதன்படி தமிழக காவல்துறையில் 14 டிஎஸ்பிக்களை பணியிட மாற்றம் செய்து சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி ஜே.கே.திரிபாதி சனிக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
இதில் முக்கியமாக தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் டிஎஸ்பி கே.பீா் முகைதீன், மதுரை மாநகர காவல்துறையின் நில அபகரிப்பு தடுப்புப் பிரிவுக்கும், தஞ்சாவூா் சிபிசிஐடி டிஎஸ்பி வி.தமிழ்வாணன் சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவுக்கும், சென்னை பெருநகர காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு உதவி ஆணையா் எஸ்.தேசிகன் சென்னை பொருளாதார குற்றப்பிரிவு தலைமையிடத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா். இவ்வாறு பணியிட மாற்றம் செய்யப்பட்ட 14 டிஎஸ்பிக்கள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பாா்கள் என காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க விலகல் : விஜயகாந்த் அறிவிப்பு
செவ்வாய் 9, மார்ச் 2021 3:33:38 PM (IST)

கருணாநிதியை அவமானப்படுத்த ஸ்டாலின் எனக் கூறினாலே போதுமானது: கமல் விமர்சனம்!
செவ்வாய் 9, மார்ச் 2021 3:29:09 PM (IST)

சென்னையில் கரோனா தாக்கம் அதிகரிப்பு: 10 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றம்
செவ்வாய் 9, மார்ச் 2021 8:46:48 AM (IST)

லாரி-கார் மோதல்: தமிழர் விடுதலை களம் கட்சி நிர்வாகிகள் 2 பேர் பலி
செவ்வாய் 9, மார்ச் 2021 8:43:45 AM (IST)

மொபட் மீது லோடு ஆட்டோ மோதல்: மதபோதகர் - மனைவி பலி; பேத்தி படுகாயம்
செவ்வாய் 9, மார்ச் 2021 8:37:35 AM (IST)

திமுக கூட்டணியில் சமகவுக்கு சீட் உண்டா? தொண்டர்கள் எதிர்பார்ப்பு....
திங்கள் 8, மார்ச் 2021 8:49:40 PM (IST)
