» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை வாய்ப்பு!
வெள்ளி 4, டிசம்பர் 2020 12:16:44 PM (IST)
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்த ‛புரெவி புயல் தொடர்ந்து ராமநாதபுரம் அருகே மையம் கொண்டுள்ளது. ராமநாதபுரத்திற்கு தென்மேற்கே 40 கி.மீ. பாம்பனுக்கு மேற்கு தென்மேற்கு திசையில் 70 கி.மீ. தொலைவில் உள்ளது. இது அடுத்த 6 மணி நேரத்தில் தூத்துக்குடி நோக்கி நகரும். இதனால் காற்றானது மணிக்கு 55 - 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். சில நேரங்களில் மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், நாகை,திருவாரூர், தஞ்சை, புதுச்சேரி, காரைக்கால், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, ஆகிய 17 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இலங்கை தாக்குதலில் உயிரிழந்த 4 மீனவர்களின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரணம்
வெள்ளி 22, ஜனவரி 2021 5:38:54 PM (IST)

மருத்துவமனையில் இருந்து கமல்ஹாசன் டிஸ்சார்ஜ்
வெள்ளி 22, ஜனவரி 2021 4:25:03 PM (IST)

குடியரசு நாள் விழாவில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் ரத்து: தமிழக அரசு அறிவிப்பு
வெள்ளி 22, ஜனவரி 2021 3:19:19 PM (IST)

முத்தூட் பைனாஸ் நிறுவனத்தில் துப்பாக்கி முனையில் ரூ.7.5 கோடி மதிப்புள்ள தங்கம் கொள்ளை
வெள்ளி 22, ஜனவரி 2021 12:40:50 PM (IST)

கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயங்க வேண்டாம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
வெள்ளி 22, ஜனவரி 2021 12:37:26 PM (IST)

பொள்ளாச்சி ஜெயராமன் தொடர்ந்த வழக்கு: உதயநிதி ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
வெள்ளி 22, ஜனவரி 2021 12:33:11 PM (IST)
