» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாகர்கோவில் - கோவை இடையே சிறப்பு ரயில் : தெற்கு ரயில்வே அறிவிப்பு

வியாழன் 3, டிசம்பர் 2020 8:21:41 PM (IST)

நாகர்கோவில் - கோவை இடையே (T.No.06321 / 06322) தினசரி சிறப்பு ரயில் சிறப்பு ரயில் இயக்க ரயில்வே நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

* சென்னை எம்.ஜி.ஆர்., சென்ட்ரலில் இருந்து, புதன்கிழமைகளில், காலை, 10:45க்கு புறப்படும் சிறப்பு ரயில், மூன்றாம் நாள் அதிகாலை, 4:15 மணிக்கு, மேற்கு வங்க மாநிலம், நியூஜல்பைகுரி சென்றடையும்

* நியூ ஜல்பைகுரியில் இருந்து, வெள்ளிக்கிழமைகளில் இரவு, 9:15க்கு புறப்பட்டு, மூன்றாவது நாள் மதியம், 2:10 மணிக்கு, சென்னை சென்ட்ரல் வந்தடையும்.சென்னை சென்ட்ரலில் இருந்து, 16ம் தேதி; நியூ ஜல்பைகுரியில் இருந்து, 18ம் தேதி முதல், இந்த ரயில்களின் போக்குவரத்து துவங்கும்.

*நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு, தினமும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில், நாகர்கோவிலில் இருந்து, தினமும் காலை, 7:35க்கு புறப்பட்டு, இரவு, 8:20 மணிக்கு கோவை சென்றடையும்

*கோவையில் இருந்து, தினமும் காலை, 7:25க்கு புறப்பட்டு, இரவு, 8:10 மணிக்கு நாகர்கோவில் சென்றடையும். நாகர்கோவிலில் இருந்து, 16ம் தேதி முதல்; கோவையில் இருந்து, 17ம் தேதி முதல், இந்த ரயில் போக்குவரத்து துவங்கும். இந்த ரயில்களுக்கான முன்பதிவு, நாளை துவங்குகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications


Thoothukudi Business Directory