» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ரஜினி கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் அர்ஜூன் மூர்த்தி; பாஜகவில் இருந்து விலகல்!!

வியாழன் 3, டிசம்பர் 2020 3:26:33 PM (IST)

ரஜினி தொடங்கவிருக்கும் அரசியல் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் அர்ஜூன் மூர்த்தி, பாஜகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக ராஜிநாமா கடிதம் அளித்துள்ளார்.

இது குறித்து பாஜகவின் மாநில பொதுச் செயலாளர் கரு. நாகராஜன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழக பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநில தலைவர் அர்ஜூன் மூர்த்தியுடைய ராஜிநாமாவை ஏற்று அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் நிரந்தரமாக விடுவிக்கப்படுகிறார். மேலும், பாஜக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவரிடம், கட்சி சார்பாக எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, வரும் ஜனவரி மாதத்தில் புதிய அரசியல் கட்சி தொடங்கப்போவதாகவும், கட்சி தொடங்கும் தேதியை டிசம்பர் 31-ம் தேதி அறிவிக்கப் போவதாகவும் ரஜினி அறிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, தனது அரசியல் கட்சி மற்றும் தனது இலக்கு குறித்து விளக்கம் அளித்தார். அப்போது, தனது கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று அர்ஜூன் மூர்த்தியை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

அர்ஜூன் மூர்த்தி, முரசொலி மாறனின் அரசியல் ஆலோசகராக இருந்தவர். முரசொலி மாறனின் மறைவுக்குப் பிறகு திமுகவிலிருந்து விலகி, பாஜகவில் இணைந்தார்.  தற்போது பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவராக பதவி வகித்து வந்த நிலையில், பாஜகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அர்ஜூன் மூர்த்தி ராஜிநாமா கடிதம் அளித்திருந்தார். அவரது ராஜிநாமா ஏற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory