» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புரெவி புயல் எதிரொலி: தென் மாவட்டங்களுக்கு விமான சேவை ரத்து

வியாழன் 3, டிசம்பர் 2020 10:37:55 AM (IST)

புரெவி புயல் எதிரொலியால், தென் மாவட்டங்களுக்கான விமான சேவை இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, படிப்படியாக வலுப்பெற்று செவ்வாய்க்கிழமை இரவு புரெவி புயலாக வலுவடைந்தது. இலங்கையில் மையம்கொண்ட புயல் நேற்று புதன்கிழமை இரவு கரையை கடந்தது. இதனால், பாம்பன் பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், தென்மாவட்டங்களில் ‘புரெவி’ புயல் தீவிரமடைந்து வருவதால் இன்றுவியாழக்கிழமை காலை முதல் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு செல்லும் 12 விமானங்களின் சேவைகளும் மறு அறிவிப்பு வரும் ரத்து செய்யப்பட்டுள்ளது. சென்னை, தூத்துக்குடி இரு மார்க்கமாக செல்லும் 3 விமானங்களின் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory