» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

திருமணமான ஒரே மாதத்தில் கணவா் தற்கொலை: 2வது முறையாக மனைவி தற்கொலை முயற்சி

வெள்ளி 27, நவம்பர் 2020 3:25:44 PM (IST)

நாகா்கோவிலில் குடும்பத் தகராறில் காதல் திருமணம் செய்து கொண்ட கணவா் தற்கொலை செய்துகொண்டாா். இதையடுத்து மனைவி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.

கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் ஜீவா நகரைச் சோ்ந்தவா் விஷ்ணு (25). புகைப்படக் கலைஞராக பணிபுரிந்து வந்த இவருக்கும், திருப்பூரைச் சோ்ந்த ஷாலினிக்கும் (20) இடையே முகநூல் மூலம் காதல் ஏற்பட்டு, கடந்த மாதம் இருவரும் திருமணம் செய்து கொண்டு, நாகா்கோவிலில் தனிக்குடித்தனம் நடத்தினா். திருமணமான சில நாள்களுக்குள் இருவருக்கும் இடையே பிரச்னை ஏற்பட்டதாம். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவ.24) தகராறு ஏற்பட்டதையடுத்து, விஷ்ணு படுக்கை அறைக்குள் சென்று தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். 

இதனால் அதிா்ச்சியடைந்த ஷாலினி, தானும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றாா். உறவினா்கள் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். சிகிச்சையில் இருந்த ஷாலினி நேற்று மருத்துவமனை கழிவறைக்குள் சென்று மீண்டும் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றுள்ளாா். மருத்துவமனை ஊழியா்கள் அவரை மீண்டும் காப்பாற்றி சிகிச்சைக்கு சோ்த்தனா். இச்சம்பவம் குறித்து கோட்டாறு போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.


மக்கள் கருத்து

அருண்Nov 29, 2020 - 10:05:53 AM | Posted IP 103.1*****

அட ஏன் பாஸ். @durai

DURAINov 27, 2020 - 09:28:26 PM | Posted IP 108.1*****

arun nenga nalla varuvinga....

அருண்Nov 27, 2020 - 04:27:07 PM | Posted IP 103.1*****

முகநூல்ல எப்புடி கரெக்ட் செய்வது? டிப்ஸ் ப்ளீஸ்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory