» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

புயல் தொடர்பான தமிழக அரசின் பணிகள் பாராட்டும் அளவுக்கு இல்லை: கமல்ஹாசன்

வெள்ளி 27, நவம்பர் 2020 10:18:20 AM (IST)புயல் தொடர்பான தமிழக அரசின் பணிகள் பாராட்டும் அளவுக்கு இல்லை என்றாலும், பரவாயில்லாத அளவில் இருந்ததாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.

சென்னை சைதாப்பேட்டை நிவாரண முகாம் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ள 250 க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் சந்தித்தார். அப்போது அவர்களிடம் குறைகளை கேட்டறிந்த கமல்ஹாசன், உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என உறுதியளித்தார்.

பின்னர்  நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் "ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு மாற்று இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தார். மேலும் புயல், வெள்ளத்தால் அரசு பாடம் கற்றுக்கொண்ட போதும் எந்த பலனும் இல்லை. புயல் தொடர்பான தமிழக அரசின் பணிகள் பாராட்டும் அளவுக்கு இல்லை என்றாலும், பரவாயில்லாத அளவில் இருந்தது.  புயல் நிவாரணப் பணியில் தமிழக அரசு இன்னும் சிறப்பாக செயல்பட்டிருக்கலாம்  என அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory