» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பைக் மீது அரசு பஸ் மோதல் ஆசிரியர் பரிதாப சாவு : மகள் படுகாயம்

வியாழன் 26, நவம்பர் 2020 7:53:38 PM (IST)

வாசுதேவநல்லூர்அருகே பைக் மீது அரசு பஸ் மோதியதில் ஆசிரியர் பரிதாபமாக இறந்தார். அவரது மகள் படுகாயமடைந்தார்.

தென்காசி மாவட்டம் ராயரிரி காந்தி தெருவைச் சேர்ந்தவர் கனியப்பன் மகன் ஆபிரகாம் செல்வராஜ் (55). இவர் ராயகிரி சிவந்தி ஆதித்தனார் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஆபிரகாம் செல்வராஜ் வாசுதேவநல்லூரில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு பைக்கில் தனது மகள்ஆக்சிலிய வைஸ்டிலின் (9) உடன் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தார். பைக் அருளாச்சி ஒத்தக்கடை விலக்கில் திரும்பியபோது அவ்வழியே தென்காசியில் இருந்து மதுரைக்கு சென்ற அரசு பஸ் திடீரென பைக்மீது மோதியது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த ஆபிரகாம் செல்வராஜ் மற்றும் அவரது மகள் சிகிச்சைக்காக சிவகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே ஆபிரகாம் செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். ஆக்சிலிய வைஸ்டிலினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆய்வாளர் அந்தோணி, உதவி ஆய்வாளர் சண்முகவேல் ஆகியோர் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திய அரசு பஸ் டிரைவர் அலங்காநல்லூர் குறவன் குளம் நடுத்தெருவைச் சேர்ந்த முருகேசன் மகன் திருஞானம் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory