» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போலீஸ்காரர் மனைவி உட்பட 2பேரிடம் நகை பறிப்பு: நெல்லையில் அடுத்தடுத்து மர்ம நபர்கள் கைவரிசை

சனி 24, அக்டோபர் 2020 5:05:25 PM (IST)

நெல்லையில் போலீஸ்காரர் மனைவி உட்பட 2பெண்களிடம் ரூ.5லட்சம் மதிப்புள்ள நகையை பறித்துச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை சந்திப்பு தெற்கு உடையார் பட்டியை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் பேராச்சி செல்வி(21). இவர் பாளை அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார். செல்வி தினமும் கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புக்கு செல்வது வழக்கம். அதன்படி இன்று காலை பேராச்சி செல்வி, வீட்டில் இருந்து கம்ப்யூட்டர் பயிற்சிக்காக தச்சநல்லூர் மேம்பாலத்தில் நடந்து சென்றார். 

பாலத்தின் மைய பகுதியில் சென்ற போது தலைப்பாகை அணிந்து ஒரே பைக்கில் வந்த 3பேர், பேராச்சி செல்வி அணிந்திருந்த 2 பவுன் செயினை பறித் துக்கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர் இதன் மதிப்பு சுமார் ரூ.70 ஆயிரம் ஆகும். தகவல் அறிந்து தச்ச நல்லூர் போலீசார் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர். அதிகாலை நேரத்தில் நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து டவுன் குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிந்து வழிப்பறியில் ஈடுபட்ட மர்ம நபர் களை தேடி வருகின்றனர்.

போலீஸ்காரர் மனைவியிடமும் கைவரிசை

இதனிடையே அரசு மருத்துவமனை பெண் ஊழியரிடம் வழிப்பறியில் ஈடுபட்ட இதே கொள்ளையர்கள், நேற்று தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலை ரயில்வே பாலத்தில் மொபட்டில் சென்ற போலீஸ்காரர் மனைவியிடமும் கைவரிசை காட்டியுள்ளனர். 

பாளை ஆயுதப்படையில் பணியாற்றுபவர் காவலர் சுபாஷ். இவரது மனைவி கவிதா, இவர் நேற்று ராமையன்பட்டியில் வசித்துவரும் உறவினரை பார்க்க மொபட்டில் சென்றார். தச்சநல்லூர் வடக்கு பைபாஸ் சாலை ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது மர்ம நபர்கள் வழிமறித்து கவிதா அணித்திருந்த 12 பவுன் செயினை பறித்துச்சென்றனர். இதன் மதிப்பு ரூ.4 வட்சம் ஆகும். இரு சம்பவங்கள் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. 

இதையடுத்து தச்சநல்லூர் மேம்பாலம் பகுதியில் உள்ள நிறுவனம் மற்றும் வீடு ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். இதில் வழிப்பறியில் ஈடுபட்ட வர்கள் உருவம் பாதிவாகியுள்ளது. இரண்டு சம்பவங்களிலும் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளது தெரியவந்தது. இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிந்து வழிப்பறி கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து நடந்த சம்பவத்தால் பொது மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது.


மக்கள் கருத்து

PremkumarOct 26, 2020 - 01:11:35 PM | Posted IP 162.1*****

No severe punishment. So it's Continue...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes


Thoothukudi Business Directory