» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மருதுபாண்டியர்களின் நினைவு நாள்: துணை முதல்வர் ஓ.பி.எஸ். மரியாதை செலுத்தினார்

சனி 24, அக்டோபர் 2020 3:44:08 PM (IST)சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூரில் இன்று செய்தி மக்கள் தொடர்புத்துறையின் கட்டுப்பாட்டில் அமைந்துள்ள மாமன்னர் மருதுபாண்டியர்கள் நினைவு மண்டபத்தில் மருதுபாண்டியர்களின் 219-வது நினைவு நாள் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையொட்டி மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் 7 அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இந்நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, உணவு மற்றும் வழங்கல் துறை அமைச்சர் ஆர்.காமராஜ், துணிநூல் மற்றும் கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், பொது சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயக்குமார், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் வாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

அதனைத்தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். முன்னதாக, மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் மருதுபாண்டியர்களின் நினைவு மண்டப வளாகத்தில் தேசியக்கொடி ஏற்றி வைத்து திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர், திருப்பத்தூர் பேருந்து நிலையம் அருகில் உள்ள மருதுபாண்டியர்களின் நினைவுத் தூணிற்கு அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes


Anbu Communications
Thoothukudi Business Directory