» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நெல்லையில் வக்கீல் மீது கொலைவெறி தாக்குதல் : ஹோட்டல் உரிமையாளர் உட்பட 7பேர் கைது

சனி 24, அக்டோபர் 2020 12:01:23 PM (IST)நெல்லையில் பிரபல வக்கீல் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தியதாக ஹோட்டல் உரிமையாளர்கள் உட்பட 7பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் பிரம்மநாயகம் என்ற பிரம்மா (43), பிரபல வழக்கறிஞர். அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் அரசு மருத்துவமனை உள்ளிட்ட பல நிறுவனங்களில் தகவலறியும் உரிமை சட்டம் மூலம் விவரங்களை பெற்று நுகர்வோர் நீதிமன்றங்களில் பொதுமக்கள், மனுதாரர்கள் சார்பில் வழக்கு தொடுத்து நடத்தி வருகிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு பாளையில் உள்ள பிரபல மதுரம் ஓட்டலுக்கு எதிராக அதன் வாடிக்கையாளர்கள் நுகர்வோர் நீதிமன்றத்தில் வக்கீல் பிரம்மா மூலமாக சில வழக்குகள் தொடுத்தனர். இந்த வழக்குகளில் வக்கீல் பிரம்மா வெற்றி பெற்றார்.

இந்நிலையில் பாளை. முருகன் குறிச்சியில் புதிதாக துவங்கப்பட்ட மதுரம் ஓட்டல் கிளையில் நேற்றிரவு 7 மணிக்கு வக்கீல் பிரம்மாவும், அவரது நண்பரும் காபி சாப்பிடச் சென்றனர். சப்ளையரிடம் சுவீட் மற்றும் காபி ஆர்டர் கொடுத்து விட்டு அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு வந்த ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் உள்ளிட்ட 10 பேர் திடீரென வக்கீல் பிரம்மாவிடம் "நீ தானே எங்கள் ஓட்டலுக்கு எதிராக நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தாய், அரசு அதிகாரிகளிடம் தகவலறியும் உரிமை சட்டத்தில் விவரங்கள் கேட்டாய் என கூறிக்கொண்டு அவரது முகத்தில் வெந்நீரை ஊற்றினர். 

இதில் அவர் நிலைகுலைந்த நிலையில் அவரது நண்பரை மிரட்டி ஓரமாக நிற்கச் சொல்லி விட்டு, வக்கீல் பிரம் மாவை சூழ்ந்து கொண்டு சரமாரியாக தாக்கினர்.இச்சம்பவத்தை வக்கீலின் நண்பர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ, நேற்றிரவு நெல்லையில் வைரலாக பரவியது. இதில் ஓட்டலின் ஷட்டரை இழுத்துவிட்டு வக்கீல் பிரம்மாவை தாக்குவதும், அவரை எழுந்திருக்கும் போது மிதிப்பதும், கண்ணத்தில் அறைவது போன்ற காட்சிகளும் பதிவாகி உள்ளன. 

தகவலறிந்த பாளை உதவி கமிஷனர் ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் சோமசுந் ரம் மற்றும் போலீசார் விரைந்து சென்று வக்கீல் பிரம்மாவை மீட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த நெல்லை வக்கீல் சங்க தலைவர் சூரியநா ராயணன் தலைமையில் வக்கீல்கள், ஓட்டலை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். வக்கீல் பிரம்மாவை தாக்கிய ஓட்டல் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டுமென கோஷமிட்டனர். போலீசார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து, சுமார் 2 மணி நேரம் நடந்த முற்றுகையை கைவிட்டு வக்கீல்கள் கலைந்து சென்றனர். 

இதுகுறித்து வக்கீல் பிரம்மா, பாளை. போலீசில் புகார் செய்தார். இதையடுத்து ஓட்டல் உரிமையாளர் அருணாசலம் மகன்கள் ஹரிஹரன், மணிசங்கர் மற்றும் ஊழியர்கள் உட்பட 7பேரை பாளை போலீசார் கைது செய்து விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். தொடர்ந்து ஓட்டலும் மூடப்பட்டது. தாக்குதலில் படுகாயம்டைந்த பிரம்மா, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே ஓட்டல் உரிமையாளர்கள் தரப்பிலும் வக்கீல் பிரம்மா மீது பாளை போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ள து.இச்சம்பவத்தால் பாளை பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. போலீசாரும் குவிக்கப்பட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory