» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பெண்களுக்கு எதிரான கருத்து : திருமாவளவன் மன்னிப்பு கேட்க குஷ்பு வலியுறுத்தல்!!

வெள்ளி 23, அக்டோபர் 2020 5:43:57 PM (IST)

பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியது பற்றி திமுக-காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று குஷ்பு கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: கட்சி மாறிச்செல்வதை விமர்சிக்கும் தலைவர், பெண்கள் குறித்து இழிவாகப் பேசுவதை கண்டிக்காதது ஏன்? பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டதாகச் சொல்லும் திமுக வாய்திறக்காதது ஏன்?

பெண்களுக்கு எதிரான கருத்தை தெரிவித்ததற்கு திருமாவளவன் மன்னிப்பு கேட்க வேண்டும். ஒரு மதத்தை சார்ந்த பெண்களை இழிப்படுத்தி பேசியது சரியா? திருமாவளவன் பேசியது மிகவும் தவறு.  கூட்டணியில் உள்ள திருமாவளவன் பேசியது பற்றி திமுக-காங்கிரஸ் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? உச்சநீதிமன்றம் வரை சென்று திருமாவளவனுக்கு ஏற்கனவே நான் பதிலளித்து விட்டேன். திராவிட கொள்கைகளை அவரவர் வீட்டிலேயே கொண்டு சேர்க்காதவர்கள் மக்களிடம் எப்படி கொண்டு செல்வார்கள் என்று கூறினார்.


மக்கள் கருத்து

மணியன்Oct 24, 2020 - 01:38:40 PM | Posted IP 162.1*****

ஒவ்வொரு புனித நூல்களில் பெண்களைப் பற்றி கூறியதை பேச ஆரம்பித்தால் மதம் கலவரம் வரும். இதைத்தான் இவர் விரும்புகிறார். ஹிந்தி வேண்டாம் என்பவர்கள் மனுநீதி சமஸ்கிருதம் பற்றி பேச தேவையில்லை. திருமூலம் திருவாசகம் திருக்குறள் பற்றி பேசட்டும் தைரியமிருந்தால்.

ராமநாதபூபதிOct 24, 2020 - 09:54:07 AM | Posted IP 162.1*****

நீ சொன்னதை விடவா அவரு சொல்லிட்டாரு. நீ எந்த ஆதாரமும் இல்லாம சொன்ன. அவரு மனுநீதியை அப்படியே புட்டு புட்டு வைச்சிட்டாரு. இப்போ வழக்கு போட்டால் என்ன ஆகும்? மனுநீதியில் சொன்னது அப்படியே பிரபலம் ஆகும். கிட்டத்தட்ட நீ சொன்னது உண்மை ஆகும்

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory