» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மதுரை அருகே உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து - 5 பேர் உயிரிழப்பு

வெள்ளி 23, அக்டோபர் 2020 5:37:28 PM (IST)

மதுரை முருகநேரி அருகே தாலிகுளத்துப்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.

மதுரை மற்றும் விருதுநகர் மாவட்ட எல்லையில் உள்ள முருகநேரி பகுதியில் உள்ள தாலிகுளத்துப்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இங்கு வழக்கம் போல் இன்று 100க்கும் மேற்பட்ட பட்டாசு தொழிலாளர்கள் பணி புரிந்து வந்தனர். இந்நிலையில் ஊழியர்கள் பட்டாசு உற்பத்தி பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக வெடி விபத்து ஏற்பட்டது. விபத்து ஏற்பட்ட உடன் பட்டாசு தொழிலாளர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர். 

இதற்கிடையில் ஒரு பட்டாசு அறையில் பணிபுரிந்து கொண்டிருந்த 3 பெண்கள் உள்ளிட்ட 5 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல்கருகி பலியாகி இருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து தகவல் அறிந்து விருதுநகரில் இருந்தும் திருவில்லிபுத்தூரில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்தன. தற்போது தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தீ முழுமையாக அணைக்கப்பட்ட பின்பு தான் உயிரிழந்திருப்பவர்களின் பெயர், விபரம் என்பது தெரியவரும் என்று தீயணைப்பு துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsBlack Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory