» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தேமுதிக பொருளாளார் பிரேமலதா விஜயகாந்துக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதியானது

திங்கள் 28, செப்டம்பர் 2020 5:21:30 PM (IST)

தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் மனைவியும், கட்சியின் பொருளாளருமான பிரேமலதாவுக்கும் கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தேமுதிக  தலைவர் விஜயகாந்துக்கு கடந்த வாரம் கரோனா வைரஸ் தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று பிரேமலதாவுக்கும் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த 22-ம் தேதி விஜயகாந்த் வீட்டிலிருந்த அனைவருக்கும் கரோனா வைரஸ் குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, பிரமேலதாவுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இல்லாமல் இருந்தது. இன்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பிரேமலதாவும், விஜயகாந்த் அனுமதிக்கப்பட்டிருக்கும் சென்னையில் உள்ள தனியார் (மியாட்) மருத்துவமனையிலேயே  சிகிச்சைக்காக தற்போது அனுமதிக்கப்பட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes






Anbu Communications



Thoothukudi Business Directory