» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மத்திய அரசின் அனுமதி: சென்னையில் கோவிஷீல்டு பரிசோதனை துவக்கம்!!

திங்கள் 28, செப்டம்பர் 2020 3:23:52 PM (IST)

கரோனா வைரசை கட்டுப்படுத்த ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள கோவிஷீல்டு மருந்தை பரிசோதனை செய்யும் பணி சென்னையில் தொடங்கியது.

கரோனாவை கட்டுப்படுத்த பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் ஆகியவை இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கி உள்ளன. இந்த தடுப்பூசியை இந்தியாவில் தயாரிப்பதற்கு மகாராஷ்டிர மாநிலம் புனேயைச் சேர்ந்த இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்துடன் ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த தடுப்பூசிக்கு இந்தியாவில் ‘கோவிஷீல்டு’ என்று பெயரிடப்பட்டு உள்ளது.

பிரிட்டன், அமெரிக்கா, பிரேசில், தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் சுமார் 30 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசியை போட்டு அவர்களுடைய உடல்நிலையை பரிசோதிக்கும் பணி நடைபெற்று வந்தது. இந்தசூழலில், பிரிட்டனில் இந்த கரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்டவர்களில் ஒருவருக்கு எதிர்மறையான விளைவுகள் ஏற்பட்டு அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதனால் தடுப்பூசி பரிசோதனை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

பின்னர் பிரிட்டனில் சோதனைகளை மீண்டும் தொடங்குவது பாதுகாப்பானது என்று கூறி அனுமதி கொடுத்ததையடுத்து, அஸ்ட்ரா ஜெனகே நிறுவனம் பரிசோதனையை தொடங்கியது. இதனையடுத்து ஆக்ஸ்போர்டின் கரோனா தடுப்பூசி மருந்தை இந்தியாவில் மீண்டும் பரிசோதனை செய்யலாம் என்று சீரம் நிறுவனத்திற்கு இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்தது. பரிசோதனையில் பங்கேற்கும் தன்னார்வலர்களின் பட்டியலுக்கும் மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில் கரோனா தடுப்பு மருந்தான கோவிஷீல்டு பரிசோதனை சென்னையில் துவங்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மற்றும் போரூர் தனியார் மருத்துவமனையில் பரிசோதனை நடைபெறுகிறது. பரிசோதனையில் கலந்துகொள்ளும் தன்னார்வலர்களுக்கு இந்த மருந்தை செலுத்தி, அவர்களின் உடல்நிலை தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது. இந்தியாவில் மொத்தம் 16 இடங்களில் பரிசோதனை செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads



Anbu Communications



Black Forest Cakes




Thoothukudi Business Directory