» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர்ந்திட ஒற்றுமையாக உழைப்போம் அ.திமு.க செயற்குழு தீர்மானம்

திங்கள் 28, செப்டம்பர் 2020 11:54:09 AM (IST)

ஒற்றுமையாக பணியாற்றி  மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர்ந்திட உழைப்போம் என்பது  உள்பட 15 தீர்மானங்கள் அதிமுக செயற்குழுவில் நிறைவேற்றப்பட்டது.

அ.தி.மு.க. செயற்குழு கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று  காலை 9.45 மணியளவில் தொடங்கியது. கட்சியின் அவைத்தலைவர் இ.மதுசூதனன் தலைமையில் கூட்ட்ம் தொடங்கியது அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, முன்னணி நிர்வாகிகள் உள்பட செயற்குழு உறுப்பினர்கள் பங்கு உள்ளனர்.

அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றபட்ட தீர்மானங்கள் வருமாறு: நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க மத்திய அரசை வலியுறுத்துவது. அதிமுகவினர் ஒற்றுமையாக பணியாற்றி  மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலர்ந்திட உழைப்போம். மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடக அரசின் நடவடிக்கைக்கு கண்டனம். கலாச்சாரத்தை ஆய்வு செய்யும் மத்திய அரசின்  குழுவில் த​மிழர்களை நியமிக்க மத்திய அரசுக்கு வலியுறுத்துவது, 

தாய்மொழி தமிழ், உலகத்தோடு உறவாட ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கையே அதிமுகவின் கொள்கை. தமிழகத்தில் இருமொழிக் கொள்கைதான் பின்பற்றப்படும். கொரோனா கால செயல்பாட்டுக்கு முதலமைச்சர், துணை முதலமைச்சருக்கு பாராட்டு தீர்மானம் உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவலை  குறைத்திருப்பதை ஏற்றுள்ள மத்திய அரசு தமிழகம்த்திற்கு தேவையான நிதியை வழங்க என்பது உள்பட 15 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu CommunicationsBlack Forest Cakes
Thoothukudi Business Directory