» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நுங்கம்பாக்கம் வீட்டிற்கு எஸ்.பி.பி.யின் உடல் கொண்டு வரப்பட்டது- பொதுமக்கள் அஞ்சலி

வெள்ளி 25, செப்டம்பர் 2020 4:28:04 PM (IST)எஸ்.பி.பி.யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் சிகிச்சை பெற்றுவந்த  எஸ்.பி பாலசுப்ரமணியம் , இன்று (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல், தனியார் மருத்துவமனையில் இருந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு  4 மணியளவில் கொண்டு வரப்பட்டது. 

எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் , அஞ்சலிக்காக இன்று இரவு முழுவதும் நுங்கம்பாக்கம் இல்லத்தில் வைக்கப்படுகிறது. எஸ்.பி.பி உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த பொதுமக்கள் அதிக அளவு திரண்டுள்ளனர்.  கொரோனா தொற்று காலம் என்பதால், கட்டுப்பாடுகள் இறுதி அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.  நாளை காலை எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல், செங்குன்றம் தாமரைபாக்கத்தில் உள்ள பண்ணை வீட்டில் நாளை நல்லடக்கம் செய்யப்படுகிறது


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest CakesThoothukudi Business Directory