» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா தொற்றிலிருந்து குணமடைந்தார் ராமராஜன்: முதல்வர் - துணை முதல்வருக்கு நன்றி!

வெள்ளி 25, செப்டம்பர் 2020 12:41:41 PM (IST)

கரோனா சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளார் நடிகர் ராமராஜன். முதல்வர், துணை முதல்வர் மற்றும் சுகாதாரத் துறை அமைச்சருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் ராமராஜனுக்கு சில தினங்களுக்கு முன்பு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு லேசான தொற்று என்றும், உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். 

தற்போது, ராமராஜன் தனது உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: "சில நாட்களுக்கு முன்பு எனக்கு கரோனாவின் தாக்கம் இருக்குமோ என்ற ஐயப்பாடு இருந்ததால் கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்றேன். அங்கு மருத்துவர்களும் செவிலியர்களும் மட்டுமல்ல அங்கு பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிவதைக் கண்டேன். எனக்கும் நல்ல முறையில் சிகிச்சை அளித்தனர்.

உயர்தர சிகிச்சை அனைவருக்கும் அங்குக் கிடைக்கிறது. இதற்காக முதல்வர் அண்ணன் எடப்பாடியார் அவர்களுக்கும், துணை முதல்வர் அண்ணன் ஒ.பி.எஸ் அவர்களுக்கும், சுகாதாரத் துறை அமைச்சர் சகோதரர் விஜயபாஸ்கர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எனக்குச் சிகிச்சை முடிந்து நேற்று வீட்டிற்கு வந்து விட்டேன். 

இந்த இடைபட்ட நாட்களில் எனக்காகப் பிரார்த்தனை செய்து என் மீது அக்கறை கொண்டு தொலைபேசியிலும், நேரிலும் நலம் விசாரித்த அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், சக நடிகர் நடிகைகளுக்கும், தயாரிப்பாளர்களுக்கும், இயக்குநர்களுக்கும், நண்பர்களுக்கும் . உற்றார் உறவினர்களுக்கும், பத்திரிகை மற்றும் ஊடகத் துறை நண்பர்களுக்கும், மக்கள் தொடர்பாளர்கள் மற்றும் என் ரசிக பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்" இவ்வாறு ராமராஜன் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads
Black Forest Cakes

Anbu Communications

Thoothukudi Business Directory