» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆர்டிஐ-யின் கீழ் தன்னைப் பற்றிய தகவல் வழங்க சசிகலா எதிர்ப்பு : சிறைத் துறைக்கு கடிதம்

வியாழன் 24, செப்டம்பர் 2020 5:02:30 PM (IST)

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தன்னைப் பற்றிய தகவல்களை அளிக்க சசிகலா எதிர்ப்பு தெரிவித்து சிறைத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளார்.

சசிகலா எப்போது விடுதலையாவார் என்பது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த நரசிம்ம மூர்த்தி ஏற்கனவே கேட்ட கேள்விக்கு, அவர் 2021ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 27-ம் தேதி விடுதலையாவார் என்று கர்நாடக சிறை நிர்வாகம் பதில் அளித்திருந்தது. இந்த நிலையில், தம்மைப் பற்றி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல்களை அளிக்க எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சிறைத் துறைக்கு கடிதம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு இதுவரை எத்தனை நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று நரசிம்ம மூர்த்தி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சிறை நிர்வாகத்தைக் கேட்டிருந்த நிலையில், சசிகலாவைப் பற்றிய தகவல்களை அளிக்க சிறைத் துறை நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Anbu Communications


Black Forest Cakes







Thoothukudi Business Directory