» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிரதமரிடம் பாராட்டு பெற்ற மதுரை சலூன் கடை உரிமையாளர் மீது கந்து வட்டி புகார்!!

புதன் 23, செப்டம்பர் 2020 3:56:33 PM (IST)

பிரதமரிடம் பாராட்டு பெற்ற மதுரை  சலூன் கடை உரிமையாளர் மீது கந்து வட்டி அளிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மோகன் தன்னிடம் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக கங்கை ராஜன் என்பவர் புகார் அளித்துள்ளார். 

மருத்துவ செலவுக்காக வாங்கிய ரூ.30 ஆயிரத்தை வட்டியுடன் திருப்பி கொடுத்த பின்னரும் மிரட்டல் விடுத்து வருவதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார். கங்கை ராஜன் அளித்த புகாரின் பேரில் மோகன் மீது மதுரை அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முன்னதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் தனது மகளின் கல்விச் செலவுக்காக வைத்திருந்த ரூ.5 லட்சத்தை கரோனா நிதிக்காக வழங்கியிருந்ததுடன், பிரதமரின் மன் கி பாத் உரையிலும் மோகன் பாராட்டு பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


மக்கள் கருத்து

ArunkumarSep 23, 2020 - 05:47:34 PM | Posted IP 162.1*****

ippothan mulumaiyaana arasiyalvaathi aayirukinga..

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored Ads

Black Forest Cakes


Anbu CommunicationsThoothukudi Business Directory