» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் 3, 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு கிடையாது : செங்கோட்டையன் திட்டவட்டம்

புதன் 16, செப்டம்பர் 2020 5:10:58 PM (IST)

தமிழகத்தில் 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு ஒருபோதும் பொதுத் தேர்வு கிடையாது என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று திட்டவட்டமாக சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, தமிழக அரசின் இரு மொழிக் கொள்கைக்கு முற்றிலும் எதிராக உள்ளதாக சட்டப் பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று குற்றச்சாட்டினார். புதிய கல்விக்கொள்கை தொடர்பாக சட்டப் பேரவையில் உரை நிகழ்த்திய மு.க. ஸ்டாலின், மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை, தமிழக அரசின் இரு மொழிக் கொள்கைக்கு முற்றிலும் விரோதமாக உள்ளது.

3, 5, 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த புதிய கல்விக் கொள்கை வலியுறுத்துவதாகவும், இது தமிழகத்தில் சிறப்பாக உள்ள நமது கல்வி முறைக்கு எதிரானது. மேலும், உயர்கல்வி ஆணையத்தை அமைப்பதன் மூலம், மத்திய அரசு, மாநில அரசின் அதிகாரங்களை பறிக்க முயல்கிறது. எனவே, புதிய கல்விக் கொள்கையை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.

இது குறித்து விளக்கம் அளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், "வரைவு அறிக்கையின் மீதான தமிழக அரசின் கருத்துக்கள் கடந்த ஆண்டு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் தமிழ்நாட்டில் மும்மொழிக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையே இருக்கும் என தெளிவாக சொல்லப்பட்டது. மத்திய அரசு, மாநில அரசு இடையே இருக்கும் மொழியாக ஆங்கிலம் தான் இருந்து வருகிறது.

புதிய கல்விக்கொள்கையை முழுமையாக பரிசீலனை செய்ய பள்ளிக் கல்வித்துறை, உயர்க் கல்வித்துறை சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு அறிக்கை தாக்கல் செய்த பின் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் சமூக நீதி, கூட்டாட்சி தத்துவத்திற்கு பாதிப்பு உண்டாக்கினால் புதிய கல்விக்கொள்கையை அனுமதிக்க மாட்டோம். மத்திய அரசு எவ்வளவு வலியுறுத்தினாலும் சில கொள்கை முடிவுகளில் தமிழக அரசு ஒருபோதும் பின்வாங்காது. 3, 5, 8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு கிடையாது என்பதில் ஒரு போதும் பின்வாங்கப்போவதில்லை என தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று சட்டப்பேரவையில் விளக்கமளித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes






Anbu Communications



Thoothukudi Business Directory