» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போக்குவரத்து பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

புதன் 16, செப்டம்பர் 2020 11:56:24 AM (IST)

போக்குவரத்து கழக பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்க வேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

இது தொடர்பாக தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது: அரசு போக்குவரத்து கழகம் தனியார் பஸ்களை வாடகைக்கு அமர்த்தி அரசு பஸ் வழித்தடத்தில் போக்குவரத்தை இயக்க அரசாணை போடப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு போக்குவரத்து கழகம் படிப்படியாக தனியார்மயமாக்கும் முயற்சியில் அரசு ஈடுபட்டு இருக்கிறது. இதை உடனடியாக தவிர்ப்பதோடு இந்த அரசானையை ரத்துசெய்து ஏழை-எளிய மக்களும், குக்கிராமத்தில் வசிக்கும் மக்களும், பள்ளி குழந்தைகளும் பயன்படும் வகையில் தற்போது நஷ்டம் என்று தெரிந்தும் பொதுமக்கள் சேவையில் அரசு போக்குவரத்து கழகம் ஈடுபட்டு வருகிறது.

தனியார்மயம் ஆக்கப்பட்டால் லாபம் உள்ள வழித்தடங்களில் மட்டும் பஸ்களை இயக்குவார்கள். இதனால் பொதுமக்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்திற்காகவும், தங்கள் உரிமைக்காகவும் அவர்கள் ஓய்வு பெறும்போது அவர்கள் பணத்தை திரும்பப்பெறவும் பல கட்ட போராட்டங்கள் நடத்தக்கூடிய சூழ்நிலையை உருவாக்குகிறார்கள். மற்ற துறைகள் போன்று பொதுசேவையில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து கழக பணியாளர்களை அரசு ஊழியர்களாக அறிவிக்கவேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes




Anbu Communications




Thoothukudi Business Directory