» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நீட் தேர்வுக்கு ஆதரவாக வாதாடிய நளினி சிதம்பரம் : அதிமுக கருத்துக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் எதிர்ப்பு

செவ்வாய் 15, செப்டம்பர் 2020 4:18:13 PM (IST)

நீட் தேர்வுக்கு ஆதரவாக நளினி சிதம்பரம் வாதாடியதாக அதிமுக எம்எல்ஏக்கள் தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டதால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். 

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நேற்று (செப். 14) தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று பூஜ்ய நேரத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வுக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இது தொடர்பான வாதத்தில், நீட் தேர்வுக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப.சிதம்பரத்தின் மனைவி நளினி சிதம்பரம் வாதாடியதாக கூறிய அதிமுகவினரின் பேச்சை நீக்கக்கோரி காங்கிரஸ் கட்சியினர் அமளியில் ஈடுபட்டுள்ளனர்.  இதனால் அவையில் கூச்சல், குழப்பம் நிலவியதால் காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். இதையடுத்து, அவர்களை காவலர்கள் வெளியேற்றினர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications








Thoothukudi Business Directory