» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கு.க. செல்வம் எம்எல்ஏ திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம் - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வியாழன் 13, ஆகஸ்ட் 2020 4:37:44 PM (IST)

சென்னையின் ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க. செல்வம், திமுகவில் இருந்து நிரந்தரமாக இன்று நீக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக தலைமை நிலைய அலுவலக செயலாளர் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் பொறுப்புக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட கு.க. செல்வம், கட்சியின் கட்டுப்பாட்டை மீறியும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதத்திலும் செயல்பட்டு வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அவரிடம் கேட்கப்பட்ட விளக்கத்திற்கு அளித்த பதில் ஏற்றுக்கொள்ளும்படியாக  இல்லாத காரணத்தால், அவர் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புக்களில் இருந்தும் நிரந்தரமாக நீக்கப்படுவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


மக்கள் கருத்து

Ju juAug 14, 2020 - 10:26:08 AM | Posted IP 108.1*****

So, கு க means குடும்ப கட்டுப்பாடு

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu CommunicationsBlack Forest Cakes

Thoothukudi Business Directory