» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நிலச்சரிவில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவிகள்: கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

புதன் 12, ஆகஸ்ட் 2020 5:50:39 PM (IST)

இடுக்கி நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் வழங்கிடுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே ராஜமலை பெட்டிமுடியில் உள்ள தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வசித்த குடியிருப்பு பகுதியில், கடந்த 7 ந்தேதி அதிகாலை பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், குடியிருப்பு பகுதியில் இருந்த 20 வீடுகள் அப்படியே மண்ணுக்குள் புதைந்தன. மேலும் அவற்றில் வசித்த தமிழக தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் 78 பேர் உயிரோடு மண்ணுக்குள் புதைந்தனர். நிலச்சரிவை தொடர்ந்து, கேரள தீயணைப்பு படை வீரர்கள், போலீசார் மற்றும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் என 600 க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

கடந்த 5 நாட்களாக நடந்த மீட்பு பணியில் 52 பேர் இறந்த நிலையில் சடலங்களாக மீட்கப்பட்டனர். நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் இன்று 6 வது நாளாக மீட்பு பணி தொடர்ந்தது. இந்தநிலையில் நிலச்சரிவில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 55- ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இடுக்கி நிலச்சரிவில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவிகள் வழங்கிடுமாறு கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடம் திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் நிவாரண இழப்பீட்டை அதிகரிக்க வேண்டும் என்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory