» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஞாயிறு ஊரடங்கு எதிரொலி: நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை

ஞாயிறு 9, ஆகஸ்ட் 2020 5:10:40 PM (IST)

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

கரோனா பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் இருக்கிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தை கருத்தில்கொண்டு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. 6-ம் கட்ட ஊரடங்கு வருகிற 31-ந்தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
 
அந்தவகையில் இன்று தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் அத்தியாவசிய சேவைகளான மருத்துவமனைகள், மருந்தகங்கள், பால் நிலையங்கள், ஆம்புலன்சுகள், அமரர் ஊர்திகள் உள்ளிட்ட குறிப்பிட்ட சில சேவைகளுக்கு மட்டுமே இயங்குவதற்கு இன்றைய தினம் அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. இவை தவிர்த்து மற்ற சேவைகள் அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று முழு ஊரடங்கு என்பதால் தமிழகம் முழுவதும் நேற்று மது விற்பனை அதிகரித்து உள்ளது. அந்த வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.189.38 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இதில் அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.44.55 கோடிக்கும், திருச்சியில் - ரூ.41.67 கோடி, சேலத்தில் - ரூ.41.20 கோடி, கோவையில் - ரூ.39.45 கோடி, சென்னையில் - ரூ.22.56 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டது.

கடந்தவார சனிக்கிழமையை விட இந்தவாரம் கூடுதலாக மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிறுவனம் தெரிவித்துள்ளது.  கடந்த வாரம் ரூ.188.86 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் ரூ.189.38 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory