» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கேரள நிலச்சரிவில் சிக்கி 40 பேர் பலி! நெல்லை, தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்!!

சனி 8, ஆகஸ்ட் 2020 5:00:48 PM (IST)கேரள மாநிலம் மூணாறு, மாங்குளம், வால்பாறை, அருகே ஏற்பட்ட நிலச்சரிவில் தென்காசி திருநெல்வேலி மாவட்டத்தைச் சார்ந்த தமிழர்கள் 40-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

கேரள மாநிலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பெய்துவரும் தொடர் மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு, பொதுமக்கள் கூடி வாழும் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் புகுந்தது என பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெற்று வருகிறது. இதனால் பலர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேற்று மூணாறு  மாங்குளம் வால்பாறை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு 100க்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாக தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் மூணாறு அருகே உள்ள ராஜமலா தோட்டத்தில் பெட்டிமுடி டிவிஷன், நயமக்காடு தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பணிபுரிந்த தென்காசி மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட தமிழர்கள் அந்த நிலச்சரிவில் சிக்கி பலியாகி உள்ளனர்.

கேரள மாநிலம் மூணாறு அருகே உள்ள ராஜமலா தோட்டம், வெட்டி முடி டிவிஷன், நயமக்காடு தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலை சேரந்த 20 தமிழர்கள் மற்றும் கலிங்கப்பட்டி அருகே உள்ள பிள்ளையார் குளத்தைச் சேர்ந்த 10 பேர்கள் மற்றும் கயத்தாறு பகுதியைச் சார்ந்தவர்கள் 10 பேர்கள் நிலச்சரிவில் மூழ்கி பலியாகி உள்ளனர். இதில் சங்கரன்கோவில் பகுதியை சேர்ந்த அருள் மற்றும் சதாசிவம் ஆகியோர் வேலை நிமித்தமாக வீட்டிலிருந்து வெளியே வந்ததால் அந்த இருவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளனர். ஆனாலும் இவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவரும்  இந்த நிலச்சரிவு சம்பவத்தில் பலியாகி உள்ளதாக  சோகத்துடன் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsAnbu Communications
Black Forest CakesThoothukudi Business Directory