» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

இ-பாஸ் பெற புரோக்கர்களை பொதுமக்கள் நாட வேண்டாம் - ஆணையர் பிரகாஷ்

சனி 8, ஆகஸ்ட் 2020 3:40:08 PM (IST)

இ-பாஸ் பெற புரோக்கர்களை பொதுமக்கள் நாட வேண்டாம்; ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ-பாஸ் பெறலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சியின் அண்ணா நகர் மண்டலத்திற்குட்பட்ட அயனாவத்தில் கொரோனா குறித்த சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நிகழ்ச்சியின் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "கொரோனாவில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகும் சதவிகிதம் 87.05% ஆக உள்ளது. இதற்கு தினசரி அடிப்படையில் பரிசோதனைகளை அதிகரித்தது முக்கிய பங்கு வகித்துள்ளது.

சென்னையில் ஆரம்பகட்டத்தை விட பின் நாட்களில் தொற்று குறைவதற்கு மக்களின் ஒத்துழைப்பே காரணம். சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு களப்பணிகள் 3 அல்லது 4 மாதங்களுக்கு தொடரும்” என்றார். மேலும் ஆதார் உள்ளிட்ட ஆவணங்களை சமர்ப்பித்து எளிதாக இ-பாஸ் பெறலாம் என்று தெரிவித்த அவர் புரோக்கர்கள், தனி நபர்களை பொதுமக்கள் நாட வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். மாவட்டங்களுக்கு இடையிலான பயணத்திற்காக இ-பாஸ் வழங்குவதில் இருந்த சிக்கல்களை எளிமைப்படுத்தி தற்போது 30% - 35% வரை கூடுதலாக இ-பாஸ்களை வழங்கி வருவதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory