» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நான் பாஜகவில் இணையவில்லை - ஜேபி நட்டாவை சந்தித்த பிறகு கு.க.செல்வம் பேட்டி

புதன் 5, ஆகஸ்ட் 2020 10:18:02 AM (IST)

"நான் பாஜகவில் இணையவில்லை" என்று  பாஜவின் தேசியத் தலைவர்ஜெ.பி. நட்டாவை சந்தித்த பின்னர் திமுக எம்எல்ஏ கு.க. செல்வம்  தெரிவித்துள்ளார். 

சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருப்பவர் கு.க. செல்வம். ஜெ. அன்பழகன் மறைவை தொடர்ந்து, அவர் வகித்து வந்த மாவட்ட செயலாளர் பதவியை செல்வம் எதிர்பார்த்திருந்ததாக தகவல் வெளியானது. ஆனால், அந்த பதவி, இளைஞரணியை சேர்ந்த சிற்றரசுவுக்கு வழங்கப்பட்டது. இதனால், செல்வம் ஏமாற்றத்தில் இருந்தார்.

இந்நிலையில், தமிழக பா.ஜ., தலைவர் எல். முருகனுடன், செல்வம் டில்லி சென்றார். அங்கு இருவரும் பா.ஜ., தேசிய தலைவர் நட்டாவை அவரது வீட்டில் சந்தித்து பேசினர். ஆனால், பின்னர் நிருபர்களிடம் பேசிய கு.க.செல்வம் கூறியதாவது: பா.ஜ.,வில் இணையவதற்காக நான் டில்லிக்கு வரவில்லை. ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலை சந்திக்கவே டில்லி வந்தேன். நாளை நடக்கும் ராமர் கோயிலுக்கு பூமி பூஜை நடத்தும் பிரதமர் மோடிக்கு பாராட்டுகளை தெரிவித்து கொள்கிறேன். 

ஆயிரம் விளக்கு தொகுதிக்கு உட்பட்ட நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் இரண்டு லிப்ட் வேண்டும் என பியூஷ் கோயலிடம் கோரிக்கை வைத்திருந்தேன். அதற்காக டில்லி வந்தேன். நட்டா சந்தித்ததற்கு நன்றி கூறவே அவரை சந்தித்தேன் . தமிழ் கடவுள் முருகனை தவறாக பேசியவர்களை ஸ்டாலின் உடனடியாக கண்டிக்க வேண்டும். உட்கட்சி தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் என ஸ்டாலினை கேட்டு கொள்கிறேன். பிரதமர் மோடி நல்லாட்சி நடத்தி வருகிறார். ராகுலுடனான உறவை முற்றிலும் துண்டிக்க வேண்டும். என் மீது திமுக நடவடிக்கை எடுத்தால் தயாராக உள்ளேன் . இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Anbu Communications

Black Forest CakesThoothukudi Business Directory