» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மாணவர்களுக்கு சத்துணவு முட்டைகள் வழங்கலாம் : தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 3:18:08 PM (IST)

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால் மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம் என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கரோனா தொற்று பாதிக்காமல் தடுக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், தமிழகம் முழுதும் உள்ள அம்மா உணவகங்களிலும் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் இலவச முட்டைகள் வழங்கவும்,பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் எனவும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா பொது நல வழக்கு தொடர்ந்திருந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு முட்டை வழங்க வேண்டும், அதே போல ஊட்டச்சத்து வைட்டமின் சி மற்றும் ஜிங்க் மாத்திரைகள் வழங்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். முட்டைகள் வாரத்திற்கு ஒரு நாள் அல்லது இரண்டு வாரத்துல உள்ளதால் தற்போது ஆசிரியர்கள் வேலை இல்லாமல் இருப்பதால் அவர்களது பணியை செய்யலாம் என்றும் தெரிவித்தனர். 

அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் ஒரே மாதிரியான மாத்திரைகளை அனைவருக்கும் வழங்க முடியாது என்றும் அதில் பிரச்சனைகள் உள்ளது என்றும் தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் மாணவ மாணவிகளுக்கு முட்டை வழங்கவேண்டும், மாணவிகளுக்கு சானிட்டரி நாப்கின் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தனர்.

அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் சமூக இடைவெளி பிரச்சினை ஏற்படும் என்பதால் முட்டை வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் அப்படியானால் டாஸ்மாக்கை மூட அரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டியது தானே என்ற கேள்விகளை முன்வைத்தனர்.

மேலும் டாஸ்மாக் கடைகள் திறந்திருப்பதால் சமூக பரவல் ஏற்படாதா என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், தொடர்ந்து பள்ளிகளில் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது இருமுறையோ எப்படியாவது முட்டை வழங்க வேண்டும் என்றும் எப்படி வழங்குவது குறித்து அரசு தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் உத்தரவுகளை பிறப்பித்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.ஏழை மாணவிகளுக்கு சானிடரி நாப்கின் எப்படி விநியோகிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று தெரிவித்த நீதிபதிகள், ஏற்கனவே சத்துணவுத் திட்டத்தின் கீழ் வழங்கி வந்த முட்டைகள் ஊரடங்கு காரணமாக தடைபட்டு விடக்கூடாது என்று தெரிவித்தனர்.

மாணவர்களுக்கு அரசு தொடர்ந்து முட்டை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், லாக்டவுன் அமலில் உள்ளதால் மாணவர்களின் பெற்றோர்களை பள்ளிக்கு அழைத்து முட்டைகள் வழங்கலாம் எனவும், அதே நேரத்தில் முட்டைகளை தினம் தோறும் வழங்குவதா, வாரம் தோறும் மொத்தமாக வழங்குவதா உள்ளிட்ட விஷயங்களை அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes


Anbu Communications

Thoothukudi Business Directory