» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு : நாகர்காேவில் இளைஞர் தமிழகத்தில் முதலிடம்

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 1:29:46 PM (IST)

கடந்த ஆண்டு நடத்தப்பட்ட சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழக அளவில் நாகர்கோவிலைச் சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம் பிடித்துள்ளார்.

மத்திய அரசு துறைகளில் உள்ள பல்வேறு அதிகாரிகள் பணியிடங்களுக்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்ந்தெடுத்து நியமனம் செய்கிறது. அந்த வகையில், கடந்த ஆண்டு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம்  ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். உள்பட 829 இடங்களுக்கு  சிவில் சர்வீசஸ் தேர்வு நடைபெற்றது.

எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் நேர்காணல்  நடைபெற்றது. இதன் முடிவுகளை யுபிஎஸ்சி இன்று வெளியிட்டது.  www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவில் சர்வீசஸ் தேர்வில் தமிழகத்தில் நாகர்கோவிலை சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் முதலிடம் பெற்றார். இவர் அகில இந்திய அளவில் 7-வது இடத்தில் உள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory