» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நூறு சதவீத கல்வி கட்டணம் கேட்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை: மெட்ரிகுலேஷன் இயக்குனர் உத்தரவு

செவ்வாய் 4, ஆகஸ்ட் 2020 11:01:18 AM (IST)

நீதிமன்ற உத்தரவை மீறி 100% கல்வி கட்டணங்களை செலுத்த வலியுறுத்தும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ஆம் தேதி இரவு முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், கல்வி நிறுவனங்களும் முழுமையாக செயல்படவில்லை. இதனையடுத்து சில தனியார் கல்வி நிறுவனங்கள் இணையவழியில் பாடம் நடத்தி வருகின்றன. பொதுமக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் கல்விக் கட்டணம் செலுத்துவதற்கு நெருக்கடி அளிக்கக்கூடாதென அரசும், நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் பெரும்பாலான தனியார் கல்வி நிறுவனங்கள் தங்களது பள்ளி மாணவ, மாணவிகளின் பெற்றோருக்கு 2019-20-ஆம் கல்வியாண்டுக்கான நிலுவைக் கட்டணம், 2020-21-ஆம் கல்வியாண்டுக்கான கட்டணத்தை செலுத்த வலியுறுத்தி கடிதம் அனுப்ப பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை மீறி 100% கல்வி கட்டணங்களை செலுத்த தனியார் பள்ளிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து  வரும் 10ஆம் தேதிக்குள்  கட்டணத்தை செலுத்த வலியுறுத்தும் பள்ளிகளின் விவரங்களை அனுப்பவும், சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Black Forest Cakes


Anbu Communications





Thoothukudi Business Directory