» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் இன்று 5,609 பேருக்கு கொரோனா உறுதி: பலி எண்ணிக்கை 100ஐ தாண்டியது!

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 7:00:07 PM (IST)

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்த 5,609 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. 

கொரோனாவுக்கு சிகிச்சை பெற்றவர்களில் 5800 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இன்று மட்டும் 109 பேர் உயிரிழந்துள்ளனர். முதல் முறையாக உயிரிழப்பு 100ஐ தாண்டியுள்ளது. இதில் சென்னையில் மட்டும் இன்று 1021 பேருக்கு தொற்று உறுதியாகி, 20 பேர் பலியாகியுள்ளனர். 

இன்று வரை தமிழகத்தின் மாெத்த பாதிப்பு 2,63,222 ஆக அதிகரித்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 2,02,283 ஆகவும் பலியானோர் எண்ணிக்கை 4,241 ஆகவும் உயர்ந்துள்ளது. இதில் சென்னையில் மட்டும் சுமார் 2,171 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் தற்போது கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 56,698 ஆகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes





Anbu Communications




Thoothukudi Business Directory