» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொள்ளைக்காரர்களிடம் மல்லுக்கட்டிய பெண்! : நெல்லையில் பரபரப்பு!!

திங்கள் 3, ஆகஸ்ட் 2020 5:48:02 PM (IST)

நெல்லையில் விடிகாலை நேரத்தில் வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்த பெண்ணிடம் நகை பறித்துவிட்டு பைக்கில் தப்பியோடிய 3 கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், பழையபேட்டை காந்திநகரை சேர்ந்தவர் சண்முகநாதன் என்பவர் மனைவி செல்வரத்தினம். இவர் வழக்கம்போல், விடியற்காலை எழுந்து வீட்டு வாசலில் கோலம் போட்டு கொண்டு இருந்தார். அப்போது வேகமாக ஒரு பல்சர் வண்டியில் 3 பேர் இருந்தனர்.. ஒருவர் பைக் ஓட்ட பின்னாடி 2 உட்கார்ந்திருந்தனர். அதில் இருந்து ஒருவர் மட்டும் இறங்கி வந்து, கோலம் போட்டு கொண்டிருந்த செல்வ ரத்தினம் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகையை பறிக்க முயன்றார். 

இதனால் செல்வரத்தினம் அதிர்ச்சி அடைந்தாலும், அடுத்த செகண்டே உஷார் ஆனார்.. தன் நகையை அவரும் கெட்டியாக பிடித்து கொண்டார். கொள்ளையன் 2 பேரும் நகையை பிடிச்சு இழுக்க, அதே நகையை செல்வரத்தினமும் இழுத்து பிடித்து கொண்டு, "திருடன் திருடன்" என சத்தம் போட்டு கத்தினார். விடிகாலை நேரம் என்பதால், அக்கம்பக்கத்தினர் சத்தம் கேட்டு திரண்டு வந்துவிட்டனர். செல்வரத்தினம் மகன் நடராஜன் வேகமாக ஓடி வருவதை பார்த்த கொள்ளையன், ஓடிப்போய் நின்று கொண்டிருந்த பைக்கில் ஏறி தப்பினார். ஆனால் நடராஜன் அவர்களை விரட்டி கொண்டே ஓடினார்.

இதை பார்த்த கொள்ளையர்கள் கையில் கொண்டு வந்திருந்த அரிவாளை வெட்டுவது போல் மிரட்டி காட்டி நடராஜனையும் கீழே தள்ளி விட்டனர். பிறகு 3 பேருமே பைக்கில் பறந்துவிட்டனர்.  அந்த பைக்கில் 3 பேரில் 2 பேர் முகமூடி அணிந்திருக்கிறார்கள். இது குறித்து போலீசில் புகார் அளிக்கப்படவும், குற்றவாளிகள் தேடப்பட்டு வருகிறார்கள்.

 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory