» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கல்வி கொள்கை எதிர்ப்பில் வென்று காட்டுவோம்: தி.மு.க தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம்

சனி 1, ஆகஸ்ட் 2020 5:37:43 PM (IST)

இடஒதுக்கீடு வழக்கைப் போல இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வென்று காட்டுவோம் என கட்சி தொண்டர்களுக்கு தி.மு.க தலைவர் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் உண்மையான தேசத் தலைவர்கள் பலரும் மதித்துப் போற்றிய இந்தியாவின் பன்முகத்தன்மையை சிதைக்கும் நோக்கில் மத்திய அரசின் செயல்பாடு இருப்பதாக விமர்சித்துள்ளார். ஊரடங்கு காலத்தைப் பயன்படுத்தி அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள அனைத்து உரிமைகளையும் பறித்துக் கொண்டிருக்கிறது மத்திய பா.ஜ.க. அரசு என்று குற்றம்சாட்டிய அவர் வெற்றிகரமாக செயல்பட்டு வரும் 10+2 என்கிற நடைமுறைக்கு மாறாக 5+3+3+4 என்கிற மாற்றம் மாணவர்கள் மீது நடத்தப்படுகின்ற உளவியல் ரீதியான தாக்குதலாகும் என குறிப்பிட்டுள்ளார்.

புதிய கல்வி கொள்கை குறித்து சம்பந்தப்பட்ட துறை சார்பில் எந்த தெளிவான அறிக்கையும் தற்போதுவரை வெளியாகவில்லை என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், இந்திய மாணவர்களின் நலன் கருதி இடஒதுக்கீடு வழக்கைப் போல இன்னல் தரும் கல்விக் கொள்கை எதிர்ப்பிலும் வெற்றி பெற்று சமூக நீதி காத்து சமத்துவ கல்வியை வளர்ப்போம் என்று உறுதி அளித்துள்ளார்.மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்காத பிற மாநில முதல்வர்கள் அரசியல் கட்சித் தலைவர்களுடன் தொடர்பு கொண்டு இந்திய மாணவர்களின் எதிர்கால நலன் காக்கும் ஒருங்கிணைப்பு முயற்சிகளையும், அதற்கான சட்டப் போராட்டங்களையும் திமுக தொடர்ந்து மேற்கொள்ளும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes


Anbu Communications







Thoothukudi Business Directory