» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களைத் திறக்கக் கோரி வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

வெள்ளி 24, ஜூலை 2020 1:11:35 PM (IST)

தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களை திறக்கக் கோரி வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் இருந்து நீதிமன்றங்களில் நேரடியாக வழக்கு விசாரணைகள் எதுவும் நடத்தப்படவில்லை. வழக்குகள் அனைத்தும் காணொலி காட்சி மூலம் மட்டுமே விசாரிக்கப்படுகிறது.இந்த நிலையில் ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தின் முன் வரும் ஆகஸ்ட் மாதம் முதல் தமிழகம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களை  திறக்க வேண்டும், வழக்கறிஞர்களுக்கு நிவாரணமாக மாதம் ரூ.15 ஆயிரம்  வழங்க வேண்டும், வங்கிகளில் 3 லட்ச ரூபாய் வட்டியில்லா கடன் வழங்க வேண்டும், என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest Cakes

Anbu Communications
Thoothukudi Business Directory