» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை ! : தென்காசி அருகே பரபரப்பு

வெள்ளி 24, ஜூலை 2020 12:04:40 PM (IST)தென்காசி மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்துள்ள வாசுதேவநல்லூர் தனியார் கல்லூரியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சங்கரன்கோவில் அருகில் குருவிக்குளத்தை சேர்ந்த நபர் ஒருவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இதனை அங்கு பணியில் இருந்த டாக்டர்கள் கண்டு உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

தொடர்ந்து புளியங்குடி காவல்துறை துணை கண்காணிப்பாளர் சக்திவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொரோனா சிகிச்சை பெற்று வந்தவர் தற்கொலை செய்த காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மன அழுத்தமா அல்லது அவருக்கு வேறு ஏதாவது தனிப்பட்ட முறையில் பிரச்சனை உள்ளதா என்று கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
 

தொடரும் தற்கொலைகள் -தீர்வு என்ன?


நெல்லை தனியார் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த பிரசித்தி பெற்ற நெல்லை இருட்டுக்கடை அல்வா உரிமையாளர் ஹரிசிங் கடந்த ஜூன் மாதம் 25ம் தேதி திடீரென தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தென்காசி மாவட்டத்தில் இன்று ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். எனவே தொடரும் இது போன்ற உயிரிழப்புகளை தவிர்க்க கொரோனா சிகிச்சை மையங்களில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும். மேலும் நோயாளிகளுக்கு மன அழுத்தத்தை போக்கும் பயிற்சிகள் அளித்து, அங்கு பாதுகாவலர்களை நியமிக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மக்கள் கருத்து

TuticorianAug 4, 2020 - 12:58:19 AM | Posted IP 108.1*****

Reading is the best medicine for any kind of stress.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Black Forest CakesAnbu Communications


Thoothukudi Business Directory