» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

நாம் தமிழர் கட்சி சீமானை கைது செய்ய வேண்டும் : தென்காசி ஆட்சியரிடம் பரபரப்பு புகார்

வெள்ளி 24, ஜூலை 2020 11:38:14 AM (IST)

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் அந்த கட்சியின் நிர்வாகிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யவேண்டும் என தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.

தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாநில தலைவர் சங்கரவேலு,  பொதுச் செயலாளர் தங்கராஜ் பொருளாளர் ரத்தினபாண்டி மற்றும் நிர்வாகிகள்  தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்  கோரிக்கை மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.அந்த கோரிக்கை மனுவில் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் அவரது கட்சியைச் சேர்ந்தவர்கள் தமிழ் தேசியம் என்ற பெயரில் தெலுங்கு சமுதாய மக்களை தொடர்ந்து மிகவும் இழிவாக பேசி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.

எனவே நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் மற்றும் அந்த கட்சியின் நிர்வாகிகளை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளனர். இந்த புகார் மனுவினை தமிழ்நாடு வீரபாண்டிய கட்டபொம்மன் பண்பாட்டு கழகத்தின் மாநில அமைப்பு செயலாளர் வேலுச்சாமி, தென்காசி மாவட்ட தலைவர் நல்லசாமி, மாவட்ட செயலாளர் ராஜன், மாவட்ட பொருளாளர் மாரியப்பன் ஆகியோர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்திற்கு உடன் வருகை தந்து புகார் மனுவை கொடுத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory