» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஊரடங்கை மீறி கொடைக்கானலில் சுற்றுலா: விமல், சூரிக்கு அபராதம்: வன ஊழியர்கள் சஸ்பெண்ட்!!

வெள்ளி 24, ஜூலை 2020 10:50:17 AM (IST)

கொடைக்கானலில் பொதுமுடக்கத்தை சுற்றுலா சென்ற நடிகர்கள் சூரி, விமல் மற்றும் இயக்குநர்களுக்கு வனத்துறை அபராதம் விதித்துள்ளது. மேலும் 2 ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்காக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்வதற்கு அரசுத்துறையிடம் இ பாஸ் பெற வேண்டும். இந் நிலையில் கடந்த 17 ஆம் தேதி கொடைக்கானல் வனப் பகுதியின் கட்டுப்பாட்டிலுள்ள பேரிஜம் ஏரிப் பகுதிக்கு நடிகர்கள் விமல், சூரி மற்றும் இயக்குநர்கள் 2 பேர் உள்ளிட்ட சிலர் அனுமதி பெறாமல் சென்று தங்கியுள்ளனர். அங்கு அவர்கள் ஏரியில் மீன் பிடித்து மகிழ்ந்துள்ளனர். அப்பகுதியில் திரைப்படத்துறையினருடன் வனத்துறையைச் சேர்ந்த பணியாளர்கள் புகைப்படம் எடுத்துள்ளனர்.

இந்த படம் சமூக வலைதளத்தில் வெளியானதையடுத்து, அரசு உத்தரவை மீறி வனப் பகுதிக்குள் சென்றவர்கள் மீதும், அவர்களுக்கு உதவி செய்த வனத்துறை அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பேத்துப்பாறையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மகேந்திரன் என்பவர்  கொடைக்கானல் காவல் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதனிடம் புகார் கொடுத்துள்ளார்.

இது குறித்து வனத்துறை ரேஞ்சர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொடைக்கானல் பேரிஜம் பகுதியில் கடந்த 17 ஆம் தேதி நடிகர்கள் விமல், சூரி மற்றும் சிலர் தங்கியிருந்துள்ளனர். அனுமதியில்லாமல் பேரிஜம் ஏரிக்குச் சென்று மீன் பிடித்த காரணத்திற்காக ரூ. 4 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் வனப் பணியாளர்கள் சைமன் பிரபு (25), செல்வம் (24) ஆகிய இருவரும் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து மற்ற வன பணியாளர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.


மக்கள் கருத்து

ராஜாJul 24, 2020 - 11:10:17 AM | Posted IP 173.2*****

இதுபோல் இபாஸ் இல்லாமல் பண்ணை வீட்டிற்கு சென்ற ரஜினி மீதும் அவருக்கு உதவிய காவல்துறை / அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Black Forest Cakes
Anbu Communications
Thoothukudi Business Directory