» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கமல் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியவரை பணியில் சேர்க்க மறுப்பது ஏன்? மனித உரிமை ஆணையம் கேள்வி

வெள்ளி 24, ஜூலை 2020 10:26:30 AM (IST)

தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்று கமல்ஹாசன் வீட்டில் நோட்டீஸ் ஒட்டியவரை பணியில் சேர்க்க மறுப்பது ஏன்? என மாநகராட்சிக்கு, மனித உரிமை ஆணையம் கேள்வி எழுப்பி உள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சியில் மலேரியா நோய் தடுப்புப்பிரிவில் ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்த வினோத்குமார் என்பவர் மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த மார்ச் மாதம் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போது சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள நடிகர் கமல்ஹாசனின் வீட்டில், தனிமைப்படுத்தப்பட்ட வீடு என்ற நோட்டீசை மேல் அதிகாரி அறிவுறுத்தலின் பேரில் ஒட்டினேன். பின்னர் அதிகாரிகள் உத்தரவின் பேரில் அந்த நோட்டீசை அகற்றினேன். இதுதொடர்பாக மாநகராட்சி மண்டல அலுவலர் ரவிக்குமார் விசாரணை நடத்தினார்.

இந்நிலையில் மறுநாள் அலுவலகம் சென்றபோது, என்னை 15 நாட்களுக்கு பணி நீக்கம் செய்துள்ளதாக சுகாதார ஆய்வாளர் கூறினார். ஆனால் அதற்கான எந்த உத்தரவையும் வழங்கவில்லை. இதுகுறித்து மே 8-ம் தேதி, மாநகராட்சி இணை ஆணையாளரிடம் முறையிட்டேன். அப்போது அவர், மார்ச் மாத ஊதியம் வழங்க நடவடிக்கை எடுப்பதாகவும், வழக்கம்போல் பணிக்குச் செல்லலாம் என்றும் கூறினார். அதன்படி, மே 9-ம் தேதி பணிக்கு சென்றேன். அப்போது வருகை பதிவேட்டில் கையெழுத்திட அனுமதிக்கவில்லை. எனவே, என்னை பணியில் சேர்த்துக்கொள்ள உத்தரவிட வேண்டும்’ என்று கூறி இருந்தார். மனுவை விசாரித்த ஆணையத்தின் தலைவர் (பொறுப்பு) நீதிபதி துரை ஜெயச்சந்திரன், இதுதொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையாளர் 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Anbu Communications

Black Forest Cakes
Thoothukudi Business Directory