» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழக அரசை பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு அமைச்சர் எஸ்.பி வேலுமணி நன்றி ! !

வியாழன் 23, ஜூலை 2020 10:22:24 AM (IST)

கறுப்பர் கூட்டம் விவகாரத்தில் நடவடிக்கை எடுத்த தமிழக அரசைப் பாராட்டிய நடிகர் ரஜினிகாந்துக்கு தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.பி. வேலுமணி பதிவிட்டுள்ளதாவது: தமிழக முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான தமிழக அரசு சமய நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் செயல்படும் யாராயினும் அரசியல் செய்யாமல் உடனடியாக கடும் நடவடிக்கை எடுத்து சட்டம் ஒழுங்கு அமைதியை நிலைநாட்டி வருகிறது. 

அவ்வகையில் கவசமாக இருந்து காக்க என்று கந்தர் அருள்வேண்டி கோடிக்கணக்கான தமிழர்கள் பாடும் பாடலை நிந்தனை செய்தோர் மீதும் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்க முயன்றோர் மீதும் முதல்வர் எடப்பாடியார் தலைமையிலான அரசு உடனடியாக நடவடிக்கை எடுத்தமைக்கு பாராட்டு தெரிவித்து, பாகுபாடு இல்லாத சமய நல்லிணக்கத்திற்கு குரல் கொடுத்துள்ள திரு. @rajinikanth அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory