» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதாத மாணவர்கள் அச்சப்பட தேவை இல்லை : அமைச்சர்

வெள்ளி 17, ஜூலை 2020 10:46:47 AM (IST)

12-ம் வகுப்புப் பொதுத் தேர்வை எழுதாத மாணவர்கள் அச்சப்படத் தேவையில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் 2-ம் தேதி முதல் மார்ச் 24 ஆம் தேதி வரை நடைபெற்றது. எனினும் கரோனா தொற்று அச்சத்தால் கடைசித் தேர்வில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொள்ளவில்லை. 12-ம் வகுப்பு இறுதித் தேர்வை சுமார் 35 ஆயிரம் மாணவர்கள் எழுதாத நிலையில், அவர்களில் 718 பேர் மட்டுமே தேர்வெழுத விருப்பம் தெரிவித்திருந்தனர். அவர்களுக்கும் தேர்வு வைத்த பின்னரே முடிவை அறிவிக்க முடியும் எனவும் முதல்வரின் ஆலோசனைப்படி 12-ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அண்மையில் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளன. இதில் 92.3% மாணவ, மாணவிகள் தேர்ச்சியடைந்துள்ளனர். 12-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் சிக்கல் உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில் இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார்.

ஈரோட்டில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசு, அரசு உதவிபெறும், மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு தேர்வு முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. பெற்றோர், மாணவர்கள் என எல்லோரின் வேண்டுகோளையும் ஏற்று, பள்ளிக் கல்வித்துறை இன்று தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.

12-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் இறுதித் தேர்வை 34,842 மாணவர்கள் எழுதவில்லை. தேர்வை எழுதாத மாணவர்கள் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை. முதல்வரின் ஆணைப்படி அவர்கள் அனைவரும் பொதுத்தேர்வை எழுத அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எல்லோரின் தேர்வு முடிவுகளும் விரைந்து வெளியிடப்படும். பிளஸ் 2 இறுதித் தேர்வு எழுதாதவர்களுக்கு 27-ம் தேதி மறுதேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும் என்றார் அமைச்சர் செங்கோட்டையன்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Anbu Communications


Black Forest Cakes




Thoothukudi Business Directory