» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

ஆலங்குளத்தில் இளைஞர்களிடம் ரூ.34 லட்சம் பறிமுதல் : ஹவாலா பணமா என விசாரணை

வெள்ளி 17, ஜூலை 2020 10:20:36 AM (IST)

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் விபத்தில் சிக்கிய காயல்பட்டினம் இளைஞர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.

தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் நேற்று இரவு மோட்டார் பைக்கில் 2 பேர் திருநெல்வேலி நோக்கிச் சென்றுகொண்டு இருந்தனர்.அப்போது அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த ஆலங்குளம் போலீஸார் அப்பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தினர்.விசாரணையில், பைக்கில் வந்தவர்கள் மேலப்பாளையத்தைச் சேர்ந்த முகைதீன் அசார் (20), தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டணத்தைச் சேர்ந்த முகம்மது சேக் முனவருதீன் (23) என்பது தெரியவந்தது.

இதில், முகமது சேக் முனவருதீன் வைத்திருந்த பையில் ரூ.34 லட்சம் இருந்துள்ளது. அந்த பணம் குறித்து அவர் கூறிய தகவல் முன்னுக்குன் பின் முரணாக இருந்ததால், ஹவாலா பணமா என்பது குறித்தும் அவருக்கு அந்த பணம் எப்படி கிடைத்தது என்பது குறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிடிபட்ட பணத்திற்கு முறையான கணக்கு இல்லாவிட்டால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸார் தெரிவித்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored AdsBlack Forest Cakes
Anbu CommunicationsThoothukudi Business Directory