» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

அமைச்சர் நிலோபர் கபிலுக்கு கரோனா: மகன், மருமகனுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது

வெள்ளி 17, ஜூலை 2020 9:00:56 AM (IST)

தமிழகத்தில் ஏற்கனவே 3 அமைச்சர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நிலையில், அமைச்சர் நிலோபர் கபிலுக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவர், வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் கரோனாவை கட்டுப்படுத்த அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்த போதிலும், நோய்த்தொற்று வேகமாக பரவி வருகிறது. கரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நிவாரண பணிகளில் அமைச்சர்கள் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு உள்ளனர். இதனால் அமைச்சர்களும் கரோனா தாக்குதலுக்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி, கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் ஆகியோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது 4-வதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபிலும் கரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். நிலோபர் கபில் சமீபத்தில் தனது சொந்த ஊரான திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து சென்னைக்கு வந்தார். சில நாட்களாக அவருக்கு சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து அவர் தன்னை கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தினார். இதனால் அவர் கடந்த 14-ந் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

இந்த நிலையில் பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று உறுதியாகி உள்ளது.இதைத்தொடர்ந்து அமைச்சர் நிலோபர் கபில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். அத்துடன், அவர் மருத்துவ கண்காணிப்பிலும் இருந்து வருகிறார். கரோனா தடுப்பு பணி மற்றும் நிவாரண பணிகளில் நிலோபர் கபில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் நிலோபர் கபிலின் மகனும் டாக்டருமான இத்ரீஷ்கபில் (45) மற்றும் மருமகன் முகமது காசிப் (40) ஆகியோர் வாணியம்பாடியில் வசித்து வருகிறார்கள். அவர்களுக்கும் கரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அமைச்சரின் மகனுக்கு சொந்தமான மருத்துவமனை மற்றும் அமைச்சரின் வீடு இருக்கும் பகுதி முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.


மக்கள் கருத்து

அம்மாJul 17, 2020 - 02:13:28 PM | Posted IP 162.1*****

இவரு மூஞ்சை பார்த்தாலே வட நாட்டு ஆம்பிளை மாதிரி இருக்கு

மக்கள்Jul 17, 2020 - 02:12:25 PM | Posted IP 162.1*****

இவ ஒரு கேவலமான பொம்பிளை

BalaJul 17, 2020 - 10:21:57 AM | Posted IP 162.1*****

Appadya iva yellam amaicharaa iva vaya thiranthu naan paarthathe illaye... sethuru...

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu CommunicationsThoothukudi Business Directory