» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

கரோனா தடுப்புப்பணி: முதல்வர் நிவாரண நிதிக்கு வந்த தொகை எவ்வளவு? - உயர்நீதிமன்றம் கேள்வி

வியாழன் 16, ஜூலை 2020 4:09:57 PM (IST)

கரோனா தடுப்புப்பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு எவ்வளவு தொகை வந்துள்ளது என்ற விவரத்தை தமிழக அரசு வெளியிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஒன்றின் விசாரணையில் நீதிமன்றம் தமிழக அரசுக்கு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.  அதன்படி, கரோனா தடுப்புப் பணிக்காக முதல்வர் நிவாரண நிதிக்கு இதுவரை எவ்வளவு தொகை வந்துள்ளது? அதில் யார், யார் எவ்வளவு தொகை கொடுத்துள்ளார்கள்? எவ்வளவு தொகை பயன்படுத்தப்பட்டுள்ளது? என்ற முழு விபரத்தை அடுத்த 8 வாரத்துக்குள் இணையத்தில் வெளியிட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts
jesus redeems

Sponsored Ads
Anbu CommunicationsBlack Forest CakesThoothukudi Business Directory