» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தண்ணீர் வரத்து இருந்தும் குளிக்க அனுமதியில்லை : வெறிச்சோடிய குற்றாலஅருவிகள்

வியாழன் 16, ஜூலை 2020 12:22:04 PM (IST)

குற்றாலம் பகுதியில் குளு குளு நிலைமை நீடித்து வருகிறது. அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருந்தாலும் குளிப்பதற்கு அனுமதி இல்லாததால் அருவி பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கடந்த ஜூன் மாதம் முதல் வாரத்திலேயே சீசன் துவங்கி விட்டது. தொடர்ந்து சாரல் மழை பெய்யாததால் அருவிகளில் தண்ணீர் வரத்து குறைந்தது. தற்போது மழை மேக கூட்டங்கள் பொதிகை மலையை தழுவிச் சென்று குளு குளு நிலைமையை ஏற்படுத்தியது. மலைப் பகுதியில் லேசான சாரல் மழையும் பெய்தது. 

இதனால் அருவிகளில் தண்ணீர் வரத்து தாராளமாக இருக்கிறது.கரோனா ஊரடங்கு காரணமாக குற்றாலத்திற்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் வரவேண்டாம் என அரசு அறிவித்து விட்டதால் குற்றால அருவிகள் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads
Black Forest CakesAnbu Communications
Thoothukudi Business Directory