» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: திருப்பூர் மாவட்டம் முதலிடம்

வியாழன் 16, ஜூலை 2020 10:43:35 AM (IST)

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டுள்ளன.  92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. 

தமிழகம் முழுவதும் தேர்வு எழுதிய மாணவ, மாணவிகளில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. இந்த ஆண்டும் எப்போதும் போல் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்றுள்ளனர். தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியிடப்படும் என தமிழக திடீரென அறிவித்திருந்த நிலையில், தற்போது இணையதளத்தில் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. 

பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிய  மாணவ, மாணவிகளில் 92.3% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் திருப்பூர் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தேர்வு எழுதிய மாணவிகளில் 94.80% பேரும், மாணவர்களில் 89.41% பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அரசு பள்ளி மாணவர்களில் 85.94% மாணவர்களில் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

தமிழகத்தில் மாவட்ட அளவில் திருப்பூர் மாவட்டம் 97.12% தேர்ச்சியுடன் முதலிடம் பிடித்துள்ளது. ஈரோடு மாவட்டம் 96.39% தேர்ச்சியுடன் இரண்டாவது இடமும், கோவை 96.39% தேர்ச்சியுடன் மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.  எப்போதும் போல் இந்த ஆண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சி பெற்று முதலிடம் பிடித்துள்ளனர். 

பாடவாரியான தேர்ச்சி சதவீதம்:
இயற்பியல் -  95.95%
வேதியியல் -  95.82%
உயிரியல்  - 96.14%
கணிதம் -  96.31%
தாவரவியல் -  93.95%
விலங்கியல் - 92.97%
கணினி அறிவியல் - 99.51%

தேர்வு முடிவுகள் மாணவ, மாணவிகளின் கைப்பேசி எண்ணிற்கு மதிப்பெண் விவரம் குறுஞ்செய்தியாக அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. 

தேர்வு முடிவுகளை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். 
 
மேலும் பிளஸ்1 தேர்வு முடிவுகளும் தற்போது வெளியாகி உள்ளது.  

மார்ச், ஜூன் பிளஸ்1 பருவத்தேர்வில் தேர்சி பெறாத மாணவர்கள் 2020 மார்ச் மாதத்தில் எழுதிய அரியர்ஸ் தேர்வு முடிவுகளும் இணையத்தில் வெளியாகி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Temporary Advts

Sponsored AdsAnbu Communications


Black Forest Cakes

Thoothukudi Business Directory